இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலி 5.6ஆக பதிவாகியிருந்தது.
நிலநடுக்கத்தில் சிக்கி 700 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.
