” ரணில் – ராஜபக்ச அரசால் இந்நாட்டை மீட்க முடியாது. எனவே, உடனடியாக தேசிய மட்டத்திலான தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” சர்வதேச உதவி கிடைக்கும் என ஆட்சியாளர்கள் கூறினாலும், குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு இன்னும் உதவி கிடைக்கவில்லை. ” எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டை மீட்பதற்காக எதிரணிகள் ஒன்றிணைந்து செயற்படும் எனவும் குறிப்பிட்டார்.
