இந்த வாரம் கோப் மற்றும் கோபா குழுக்களின் முன்னிலையில் நான்கு நிறுவனங்கள் அழைப்பு

இந்த வாரம் அரச பொறுப்பு முயற்சிகள் குழு (கோப் குழு) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) முன்னிலையில் நான்கு நிறுவனங்கள் அழைக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் எதிர்வரும் 22ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருப்பதுடன், 23ஆம் திகதி தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் அழைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், முத்துராஜவல சதுப்பு நிலம் தொடர்பில் ஆராய்வதற்காக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் நாளை 21ஆம் திகதி அரசாங்க கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துனர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய வரிகள் மற்றும் தண்டப் பணங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இறைவரித் திணைக்களம் 23ஆம் திகதி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles