ரஷ்யா, உக்ரைனில் இனப்படுகொலையில் ஈடுபட்டுவருகின்றது என ஐ.நா. பொதுசபை கூட்டத்தொடரில் விளாசித் தள்ளியுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரானது தொடர்ந்து, ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். தூதரக அளவிலான அமைதி பேச்சுசும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தமதுரையில், ரஷ்யாவில் உள்ள உக்ரைனிய குழந்தைகளை திரும்ப சொந்த நாட்டுக்கு கொண்டு வர நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஆனால், காலம் கடந்து செல்கிறது. ரஷ்யாவில் உள்ள அந்த குழந்தைகளுக்கு உக்ரைனை வெறுக்கும்படி கூறப்படுகிறது. அவர்களுடைய குடும்பத்தினருடனான உறவுகள் முறிகின்றன. இது தெளிவாக ஒரு இனப்படுகொலை என்று பேசியுள்ளார்.