இனவாத, மதவாத கட்சிகளுக்கு ஆப்பு!

இனம் மற்றும் மதங்களை மையப்படுத்திய அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது – என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹோவா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சமூகத்துக்கு நன்மை பயக்கும் விதத்தில் கடந்தகாலங்களில் எல்லை நிர்ணயம் இடம்பெறவில்லை. இன, மத, குல பேதங்களின் அடிப்படையில் அவ்வாறான பணி இடம்பெறக்கூடாது.

எனவே, இன மற்றும் மதங்களை அடிப்படையாகக் கொண்டு கட்சிகள் பதிவு செய்வது நிறுத்தப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகள் தொடர்பிலும் ஆய்வு செய்த பின்னர், உரிய தீர்மானம் எடுக்கப்படும்.” – எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles