” இனி தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படமாட்டாது”

தேசிய பாடசாலைகளை தொடர்ந்து உருவாக்காமல் அதற்குப் பதிலாக இணைந்த பாடசாலைகளை உருவாக்குவதற்கு கல்விமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் 1250 இணைந்த பாடசாலைகளை நாடளாவிய ரீதியில் உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் அருகிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் பாடசாலை குழுமமாக இணைந்து செயற்படுவதுடன் அதில் பிரபலமான பாடசாலை ஒன்றுடன் ஏனைய பாடசாலைகள் இணைந்து செயற்படவுள்ளன.

அந்த வகையில் ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பிரதான பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்படுவதுடன் அவ்வாறில்லாத மாணவர்கள் 13ஆம் வகுப்பு வரை தொடர்ச்சியாக கல்வி பயிலும் வகையில் பாடசாலைகளை முன்னேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

Latest Articles