‘இன்னும் இரு வாரங்களில் பஞ்சம் ஏற்படும்’ ! விடுக்கப்பட்டது அபாய எச்சரிக்கை!!

” இன்னும் இரு வாரங்களில் அந்நிய செலாவணி கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வந்துவிடும். ஓரிரு வாரங்களில் பஞ்சமும் ஏற்பட்டுவிடும்.” – என்று அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அமைச்சரவையில் உள்ள பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஜனாதிபதியின் அடிமைகளே! தனி நபர் ஆட்சிக்காகவே 20 கொண்டுவரப்பட்டது.

அதேவேளை, இன்னும் இரு வாரங்களுக்குள் அந்நிய செலாவணி பூஜ்ஜிய மட்டத்துக்கு வந்துவிடும். ஓரிரு வாரங்களுக்குள் பஞ்சமும் ஏற்படும். அத்தியாவசியப் பொருட்களைக்கூட விநியோகிக்கமுடியாத நிலைமை அரசுக்கு ஏற்படும். குழப்பகரமான சூழ்நிலை உருவாகும்.” – என்றார்.

Related Articles

Latest Articles