மண்ணெண்ணெய் விலை இன்னும் ஓரிரு நாட்களில் கட்டாயம் அதிகரிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” பெரும் நஷ்டத்துக்கு மத்தியில் நிவாரண விலையிலேயே தற்போது மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுவருகின்றது.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










