பலத்த மழை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, காலி, குருணாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகள் அதில் அடங்குகின்றன.
8 மாவட்டங்களின் 9,419 குடும்பங்களைச் சேர்ந்த 35,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தளம் மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நாட்டை ஊடறுத்து தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைகொண்டு வருகின்றமையால் நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடமாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
