இன்றும் எரிவாயு வெடிப்பு சம்பவம் பதிவானது……

கண்டி, குண்டசாலை – நத்தரம்பொத்த பகுதியிலும் சமையல் எரிவாயு வெடித்ததில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

நாட்டில் நேற்றைய தினமும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு எடுப்புச் சம்பங்கள் இடம்பெற்றன.

Related Articles

Latest Articles