இன்றும் சில பிரதேசங்களுக்கு மின்வெட்டு!

நுரைச்சோலை அனல் மின்நிலைய மின்பிரப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாளொன்றுக்கு 45 நிமிடகளுக்கு மின்வெட்டை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீள் திருத்த பணிகள் நிறைவடைந்து இயழ்பு நிலைக்கு திரும்பும் வரையில் சில தினங்களுக்கு இந்த மின்வெட்டு அமுலில் இருக்குமெனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாலை 6.00 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் இந்த மின்வெட்டு தேவைக்கேட்ப முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு செயலிழந்துள்ள மின் பிரப்பாக்கியில் தொடர்ந்து எண்ணெய் கசிவு ஏற்படுமென மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார மானவடு தெரிவித்துள்ளாா்.

அதனால், மின் உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டி ஏற்பட்டுள்ளதால் கட்டமைப்பை சமநிலையாக முன்னெடுத்துச் செல்வதற்காக மின்தடை ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

இன்னும் 5 – 6 வருடங்களுக்கும் நுரைச்சோலை இயந்திரத்தில் இவ்வாறு கோளாறு ஏற்படலாம் என்றும் ,அதனை நிறுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

அதேபோன்று தற்போது இடம்பெற்றுவரும் திருத்தப்பணிகள் எத்தனை நாட்களில் நிறைவடையும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.

Related Articles

Latest Articles