இன்றும் மழை – நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

கடும் மழையால் மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 46 வீதம் வரை உயர்வடைந்துள்ளது.

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 77 வீதம் வரையிலும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 44 வீதம் வரையிலும் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பெரும்போக பயிர்ச்செய்கைக்காக நீரை விடுவிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை எதிர்வரும் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

உரிய கால அட்டவணைக்கு அமைவாக பயிர்ச்செய்கையை ஆரம்பிக்குமாறு அதிகாரசபை, விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும்(18) பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, ஊவா, மத்திய, தென் மாகாணங்களில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, வட மத்திய, கிழக்கு மாகாணங்களில் மின்னல் தாக்கம் ஏற்படலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles