இன்று அரியணையேறுகிறார் ரணில்!

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் பதவியேற்கவுள்ளார்.

பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

பதில் ஜனாதிபதியாகச் செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின்போது, 134 வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாகத் தெரிவானார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும 82 வாக்குகளையும், அநுரகுமார திஸாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, நாட்டின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டமைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டது.

Related Articles

Latest Articles