இன்று நள்ளிரவுடன் மௌனகாலம் ஆரம்பம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் யாவும் இன்று (11) நள்ளிரவுடன் ஓயவுள்ளது.

இவ்வாறு ஆரம்பமாகும் மௌன காலத்தில் எவரும் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது எனவும், அவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் பரப்புரை முன்னெடுக்க முடியாது, அதனை கண்காணிப்பதற்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறும்.

Related Articles

Latest Articles