இன்று நள்ளிரவு முதல் மின் கட்டணம் குறைப்பு!

இன்று(04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மின் கட்டணம் 21.9 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.

இன்று(04) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இதனை அறிவித்தார்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் கூட்டத்தின் போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
30 இற்கும் குறைந்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் 33 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.

அதேநேரம், 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 28 சதவீதத்தாலும் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கான கட்டணம் 30 சதவீதத்தினாலும் குறைக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
90 முதல் 180 வரையான அலகுகளுக்கு 24 சதவீதமும், 180க்கு மேற்பட்ட அலகுகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்படவுள்ளது.

இதேவேளை, சமய வழிபாட்டு தலங்களுக்கான கட்டணம் 33 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்படவுள்ளது.

அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தினாலும், பொதுவான கட்டணம் 23 சதவீத்தினாலும் குறைக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles