இன்று பகல் இடியுடன்கூடிய மழை…..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 01 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வட மத்திய, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனைத்தவிர, மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காலை மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles