நாட்டில் மேலும் 230 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரை 487 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இதுவரையில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரத்து 590 பேர் குணமடைந்துள்ளனர்.