இன்று முதல் அடை மழை!

மழையுடன் கூடிய வானிலை இன்று(14) முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா, மேல், தென் மாகாணங்களில் மற்றும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களில் கன மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மழையுடனான வானிலையால் 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles