இன்று மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு! பிரதமர் விசேட உரை

கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், இலங்கையில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவருக்கு பதில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றார்.

இந்நிலையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சி சார்பற்ற அரசு ஒன்றை அமைக்க வருமாறு இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால் அவரது அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்று :நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி குறித்து இன்று முழு விளக்கம் அளிக்க உள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை நிறைய இருப்பதாகவும், அவைகளுக்கு தமது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் தமது டுவிட்டர் பதிவில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles