இம்முறை நடைபெறவுள்ள LPL போட்டியில் காலி அணி வெற்றிபெறுமென அதன் உரிமையாளர் நதீம் ஓமர் தெரிவிப்பு

இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்பப் போட்டியின் போது காலி க்லேடியேடர்ஸ் அணி இறுதிப்போட்டி வரை நுழைந்து யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவியது.

எனினும், காலி க்லேடியேடர்ஸின் உரிமையாளரான நதீம் ஓமர் கூறுகையில் இரண்டாவது தடைவ நடைபெறவுள்ள பிரீமியர் இருபதுக்கு இருபது லீக்கின் போட்டித் தொடரில் மீண்டும் சிறந்த விதத்தில் வலுவடைந்து போட்டியை எதிர்கொள்ள தயாராகவுள்ள காலி க்லேடியேடர்ஸின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

போட்டியின் ஆரம்பக் கட்டத்தில் பாகிஸ்தானின் நட்சத்திர வீரரான ஷயிட் அஃவ்ரிடியினால் அணி வழிநடத்தப்பட்டதுடன், தனிப்பட்ட காரணங்களால் அஃவ்ரிடி போட்டியின் இடைநடுவில் விலகியதன் பின்னர் இலங்கையின் பானுக்க ராஜபக்ஷ அந்த பொறுப்பை ஏற்றார். அணியின் ஆலோசகராக முன்னால் பிரபல வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் ஆவார்.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் (PSL) க்வெட்டா க்லேடியேட்டர்ஸ் ஃபிரென்சைஸின் உரிமையாளராகவுள்ள ஓமர் பாகிஸ்தான் வர்த்தக நிறைவேற்று அதிகாரியாக இருப்பதுடன் முன்னாள் வீரரும் ஆவார்.

அவர் விளையாட்டு தொடர்பில் செய்யும் பங்களிப்பு தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பிரபல்யமடைந்தவராவார். அவர் 2020 ஒக்டோபர் மாதத்தில் இருந்து பாகிஸ்தானின் ஸ்கிரபல் சங்கத்தின் தலைவராகவும் 2018 மே மாதம் முதல் கராச்சி நகர கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். காலி ஃபின்சைஸின் அடிப்படை நோக்கமானது கிரிக்கெட் விளையாட்டை இலங்கையின் தென் மாகாணத்திற்குள் சிறந்த மட்டத்திற்கு கொண்டுவருவதாகும்.

‘லங்கா பிரீமியர் லீக்கின் எதிர்காலம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

குறிப்பாக கடந்த போட்டியில் அசாம் கான், தனஞ்சய லக்ஷன் மற்றும் சஹான் ஆராச்சிகே போன்ற இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளை நாங்கள் அவதானித்தோம்.

அவர்களின் இந்த திறன்கள் எங்கள் அணியின் முன்னேற்றத்திற்கு பெரும் பலம்.

அடுத்த சுற்றில் இன்னும் சிறப்பாக விளையாடி கிண்ணத்தைக் கைப்பற்றுவோம் என நம்புகிறோம். காலியைச் சுற்றியுள்ள பார்வையாளர்கள் எப்போதும் எங்களுடன் இருந்தனர்.

தற்போதைய தொற்றுநோய் காரணமாக அவர்கள் போட்டிகளைப் பார்வையிட அனுமதிக்கவில்லை, ஆனால் நாங்கள் அவர்களிடமிருந்து பல்வேறு வழிகளில் பெற்ற ஆதரவு எங்களை மேலும் ஊக்கப்படுத்தியது.’ இலங்கையில் நடைபெற்ற பிரீமியர் லீக் டுவென்டி -20 கிரிக்கெட் போட்டியை ஞாபகப்படுத்தி அவர் இதனைத் தெரிவித்தார்.

லங்கா பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ விளம்பரதாரரான துபாயை தளமாகக் கொண்ட IPGயின் நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் மோகன் கூறினார்: ‘LPLன் முதல் ஆட்டத்தில் கிளாடியேட்டர்ஸ் சிறந்த ஆட்டத் திறமையை வெளிப்படுத்தினர். கிளாடியேட்டர்ஸ் இரண்டாவது LPLஇன் போது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். காலி அணியின் திறமை இந்த போட்டியின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்.’ என தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 26 முதல் டிசம்பர் 16, 2020 வரை, உயிரியல் பாதுகாப்பு குமிழில் விளையாடிய லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆரம்பப் போட்டி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் 557 மில்லியன் மக்களால் பார்வையிடப்பட்டது.

அனுசரணையாளர்கள் 54.5 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபத்தை அடைந்தனர் மற்றும் தனியுரிமை அனுசரணையாளர் MY11CIRCLE 9’85x வருவாயைப் பெற்றது. முதல் LPL போட்டியின் வெற்றியாளர், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸூக்கு 3.98 மில்லியன் அமெரிக்க டொலர்களை வென்றது, அதைத் தொடர்ந்து காலி கிளாடியேட்டர்ஸ், 3.82 மில்லியன் அமெரிக்க டெலர், தம்புள்ள கிங்ஸ், 3.54 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் கிங்ஸ் டஸ்கர்ஸ், 3.19 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், யுனைடெட் கிங்டம், கனடா, அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் Sky Sports, Sony Sports Network, Geo, PTV மற்றும் Willow TV நேரடியாக ஒளிபரப்பப்பட்ட LPL போட்டியை 155 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். சமூக ஊடகங்களில், இது 218 மில்லியன் பார்வைகளை எட்டியது மற்றும் LPL 133478 லாபம் ஈட்டியது. லீக்கின் ஒவ்வொரு போட்டியுடனும் புதிய உத்வேகத்தைப் பெறுகிறது மற்றும் சர்வதேச அளவில் விளையாட்டின் எல்லைகளில் பிரகாசிக்க பங்களிக்கிறது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles