பதுளை தோட்டப்புறங்களில் செந்தில் தொண்டமானுக்கு உள்ள அசைக்க முடியாது செல்வாக்கால் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும் பெரும்பான்மையினர்!!
– இம்முறை மக்கள் ஏமாறத் தயாரில்லை : தனி விருப்ப வாக்குகளுடன் செந்தில் தொண்டமானை பாராளுமன்ற அனுப்புவதில் உறுதியாகவிருக்கும் பதுளை தமிழர்கள் –
பதுளை மாவட்டத்தில் தோட்டப்புறங்களில் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்குள்ள அசைக்க முடியாத செல்வாக்கால் அவரின புகைப்படமின்றி தோட்டப்புறங்களில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதையறிந்து பெரும்பான்மை அரசியல்வாதிகள் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தையும் தமது சுவரொட்டிகளில் இணைத்து அச்சிட்டு வருவதை பரவலாக காணமுடிகிறது.
பதுளைத் தேர்தல்களம் நாளுக்குநாள் பரபரப்படைந்து வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தமிழ் வேட்பாளராக களமிறங்கியுள்ள செந்தில் தொண்டமானின் செல்வாக்கு தோட்டப்புறங்களில் அசைக்க முடியாத அளவு வளர்ச்சிக்கண்டுள்ளது. அத்துடன், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களும் தொடர்ந்து செந்தில் தொண்டமானுடன் கைகோர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தோட்டப்புறங்களில் செந்தில் தொண்டமானின் புகைப்படமின்றி எந்தவொரு பெரும்பான்மை வேட்பாளரும் இம்முறை வாக்குளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதால் தமது சுவரொட்டிகளுடன் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தையும் சேர்த்து அச்சிட்டு அனைத்து தோட்டப்புறங்களிலும் பொது இடங்களிலும் ஒட்டிவருகின்றனர்.
ஆனால், பதுளைவாழ் தமிழர்கள் இம்முறை அதிகூடிய தனி விருப்ப வாக்குகள் மூலம் செந்தில் தொண்டமானை பாராளுமன்றத்திற்கு அனுப்பி அரசாங்கத்தில் ஓர் அதிகாரம் மிக்க அமைச்சுப் பதவியை பெற்றுக்கொடுப்பதில் உறுதியாகவுள்ளனர். புத்திஜீவிகளும், ஆசிரியர் சமூகமும் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளதுடன், போலியான பிரசாரங்களை கண்டு மக்கள் ஏமாறக் கூடாதென கேட்டுக்கொள்கிறது.
கடந்த மாகாண சபைத் தேர்தலின் செந்தில் தொண்டமான் 33 வாக்குகளைப் பெற்றிருந்தார். முதலமைச்சராக நியமிக்கப்பட்ட சாமர சம்பத் 35 வாக்குளைப் பெற்றிருந்தார். சாமர சம்பத் பெற்றுக்கொண்ட வாக்குகளில் 8ஆயிரம் வாக்குகள் தோட்டப்புற வாக்குகளாகும். அந்த வாக்குகள் செந்தில் தொண்டமானுக்கு அளிக்கப்பட்டிருந்தால் ஊவா மாகாண முதலமைச்சராக ஒரு தமிழர் தெரிவாகியிருக்க முடியும். பதுளையில் 80 சதவீதம் பெரும்பான்மையினரும் 20 சதவீதம் சிறுபான்மையினரும் வாழ்கின்றனர். செந்தில் தொண்டமானுக்கு உள்ள அசைக்க முடியாத செல்வாக்கு காரணமாகவே அனைத்து பெரும்பான்மை அரசியல்வாதிகளும்; இவ்வாறு அவருடைய புகைப்படத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், இம்முறை பதுளைவாழ் தமிழ் மக்கள் தெளிவாக உள்ளனர். இவ்வாறான போலி சுவரொட்டிகள் மற்றும் பிரசுரங்களை கண்டு நம்பிவிடாமல் தனி விருப்ப வாக்குளை செந்தில் தொண்டமானுக்கு அளித்து அமைய போகும் அரசாங்கத்தில் மலையகத் தமிழர்களின் உரிமைகளை பேரம் பேசி வென்றெடுக்கக் கூடிய அதிகாரத்தை பெற வழிசமைக்க வேண்டுமெனவும் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.