இரசாயன உர இறக்குமதிக்கான அனுமதியை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் அரசாங்கம் தமது பொறுப்பில் இருந்து விலகி விட முடியாது என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சேதன பசளை அல்லது இரசாயன உரத்தை உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ள விவசாயிகளின் நன்மை கருதியே அரசாங்கம் தமது கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்தது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக தற்போது தனியார் நிறுவனத்திற்கும் இரசாயன உரத்தினை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த விடயத்தில் உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதுடன், அரசாங்கம் என்ற வகையில் தமக்கும் அந்த பொறுப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
