இரசிகர்களின் மனதை நொறுக்கிய மாலிங்கவின் ‘கடைசி யோக்கர்’

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதான மாலிங்க, எதிர்வரும் ரி-20 உலகக்கிண்ண தொடரில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அண்மையில் வெளியான உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்த மாலிங்க, தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெற்றுள்ளார்.

யோக்கர் பந்துகள் வீசுவது மலிங்கவுக்கு கைவந்த கலை. எனினும், இன்று அறிக்கையாக அவர் வீசிய யோக்கர் பந்தானது கிரிக்கெட் இரசிகர்களின் மனதை நொறுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

Related Articles

Latest Articles