இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களைக் கண்டுபிடிக்க அரசிடம் எந்த வழியும் இல்லை

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரட்டை குடியுரிமை பிரஜைகளை அடையாளம் காணும் முறைமை அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீதித்துறை நடவடிக்கை மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

“அதனை கண்டறிய அரசாங்கத்திடம் வழியில்லை. அதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. நீதிமன்றம் மூலம் தேடினாலே ஒழிய, அரசாங்கம் அதனை தேடி கண்டுபிடிப்பதற்கு வழி இருப்பதாக என்னுடைய அறிவுக்கு எட்டியவரை கருதவில்லை. எனவே இது நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என முன்னாள் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டிருந்தார். “

ஒக்டோபர் 26ஆம் திகதி புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், இரட்டைக் குடியுரிமை தொடர்பில் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அரசாங்கம் அந்த பெயர்களை வெளியிடுமா எனவும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஒக்டோபர் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், இரட்டை குடியுரிமை பிரஜைகளுக்கு நாட்டின் சட்ட மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles