இரட்டை கோபுர தாக்குதல் நடந்த நாளில் கொழும்பை விட்டு வெளியேறிய மஹிந்த

இலங்கையின் 5 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச, கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அரச அதிகாரப்பூர்வ வதிவிடத்தில் இருந்து இன்று பிற்பகல் வெளியேறினார். தங்காலை, கால்டன் இல்லத்தில் அவர் குடியேறுவதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து இன்று பிற்பகல் அவர் வெளியேறும்போது, அப்பகுதியில் மொட்டு கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் ஒன்றுகூடி இருந்தனர்.அத்துடன், மஹிந்த ராஜபக்ச வெளியேறுவதற்கு முன்னர் அவரை வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலரும் சந்தித்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்கமைய அரச மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு ஊடக சந்திப்புகள்மூலம் வலியுறுத்தப்பட்டது.

எனினும், தனக்கு சட்டப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அது பற்றி பரிசீலிக்க முடியும் என மஹிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார். இதனால் இவ்வீடு விவகாரம் அரசியல் ரீதியிலும் பேசுபொருளானது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் சான்றுரை படுத்தியுள்ளதால் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதனையடுத்தே அரச மாளிகையில் இருந்து இன்று மஹிந்த வெளியேறினார்.

மஹிந்தவின் வெளியேற்றம் குறித்து கருத்து வெளியிட்ட மொட்டு கட்சி பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன,

” செப்டம்பர் 11 என்பது உலகில் பலம்பொருந்திய நாட்டுக்கும் பயங்கரவாதத்தின் அச்சம் தென்பட்ட நாளாகும். செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த நாளாகும்.

பயங்கரவாதிகளிடம் இருந்து இலங்கையை பாதுகாத்த தலைவர் இப்படியானதொரு நாளில் அதிகாரப்பூர்வ வதிவிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஓய்வுபெற்ற பின்னர் அவருக்கு இந்த வீட்டை (விஜேராம) வழங்குமாறு நான் யோசனை முன்வைக்கின்றேன்.

மஹிந்த ராஜபக்ச என்பவர் அநுரவுக்கு பயந்தவர் அல்லர்.” – என்று குறிப்பிட்டார்.

மஹிந்தவின் அரசியல் பயணம்

🛑 1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்ட அவர், 23 ஆயிரத்து 103 வாக்குகளைப்பெற்று நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். நாடாளுமன்றத்துக்கு இளம் வயதில் (25) தெரிவான உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றார்.

🛑 1977 – பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தார்.

🛑 1989 – அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிறங்கி, 13 ஆயிரத்து 73 வாக்குகளைப்பெற்று மீண்டும் நாடாளுமன்றம் தெரிவானார்.

🛑 1994 – இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 78 ஆயிரத்து 77 வாக்குகளுடன் சபைக்கு தெரிவானார். இத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிநடை போட்டது.

🛑 1994 சந்திரிக்கா தலைமையிலான அமைச்சரவையில் தொழில் அமைச்சு பதவி வழங்கப்பட்டது. 1997 வரை அப்பதவியில் நீடித்தார்.

🛑 1997 – மீன்பிடித்துறை அமைச்சு பதவி ஒப்படைக்கப்பட்டது. 2001 வரை அப்பதவியை முன்னெடுத்தார்.

🛑 2001 – பொதுத்தேர்தலில் 109 ஆசனங்களை வென்று ஐ.தே.க. ஆட்சி அமைத்தது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றம் தெரிவானார்.

🛑 2004 – பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி. சபைக்கு தெரிவான மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. 2002 முதல் 2004 வரை அவர் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

🛑 2005 – இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச களமிறங்கினார். 48 லட்சத்து 87 ஆயிரத்து 152 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

🛑 2010 – ஜனாதிபதித் தேர்தலில் 2ஆவது முறையும் போட்டியிட்டார். 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

🛑1978 அரசமைப்பின் பிரகாரம் நபரொருவர் இரு தடவைகள் மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 18 ஆவது திருத்தச்சட்டம்மூலம் இந்த ஏற்பாட்டை மஹிந்த – கடும் எதிர்பபுக்கு மத்தியில் மாற்றினார்.

🛑 2015 – மூன்றாவது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். எனினும், அவரால் வெற்றிபெறமுடியவில்லை.

🛑 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் களமிறங்கிய மஹிந்த ராஜபக்ச 4 லட்சத்து 23 ஆயிரத்து 529 வாக்குகளைப் பெற்றார்.

🛑 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமராக பதவியேற்றார். (ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி)

🛑 2018 டிசம்பர் 15 ஆம் திகதி பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்தார்.

🛑 2018 டிசம்பர் 18 இல் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

🛑 2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச
வெற்றிபெற்றதையடுத்து, நவம்பர் 21 ஆம் திகதி பிரதமராக பதவியேற்றார் மஹிந்த.
🛑2020 பொதுத்தேர்தலில் குருணாகலையில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றார். இலங்கை அரசியல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாகும். மீண்டும் பிரதமராக பதவியேற்பு.

🛑 2022 மே 09 ஆம் திகதி, பிரதமர் பதவியில் இருந்து விலகும் அறிவிப்பு விடுப்பு. (அறகலய)
2024 பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை.

2025 செப்டம்பர் 11 ஆம் திகதி அன்று அரசியலை ஆரம்பித்த இடத்துக்கே குடியேறுவதற்கு சென்றுவிட்டார்.

ஆர்.சனத்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles