இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு

வடக்கின் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால்
ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டன.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடு குளத்திற்கு அதன் நீரேந்து பகுதிகளிலிருந்து அதிக நீர் வரவு காரணத்தினால் இன்று (28.11.2021)அதிகாலை 6 மணி அளவில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன.

இரண்டு வான்கதவுகள் 6 அங்குலத்திற்கும், இரண்டு வான் கதவுகள் 12 அங்குலத்திற்கும் திறக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles