கடந்த நல்லாட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஊடாக வழங்கப்படும் இரண்டாம் மொழி டிப்ளோமா சான்றிதல் பாடநெறி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவித்தகுமார் இதனை தெரிவித்துள்ளார்.
நிலட் எனப்படும் குறித்த பாடநெறியை மீண்டும் சூம் ஒன்லைன் ஊடாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரவிந்தகுமார் அறிவித்துள்ளார்.
ஆகவே குறித்த பாடநெறியை தொடர ஆர்வமுள்ள, ஏற்கனவே விண்ணப்பித்துள்ள மாணவர்கள் நிலட் slk@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புக் கொள்ளுமாறு அவர் விண்ணப்பதாரிகளிடம் கேட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக தகவல் தேவையெனில் 077-3516116 அல்லது 071-5969985 என்ற தொலைப்பேசி இலக்கங்களை தொடர்புக் கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
அப்படியும் இல்லாவிடின் 070–3991960 அல்லது 077-9135793 என்ற இலக்கங்கத்தின் ஊடாக தனது மக்கள் தொடர்பு அதிகாரியை தொடர்புக் கொள்ளுமாறும் அரவிந்தகுமார் கேட்டுள்ளார்.