‘இரத்தினபுரியில் அடிமை அரசியலில் இருந்து விடுபடுவோம்’

“நாம் காலம் காலமாக எமது பொன்னான வாக்குகளைபெரும்பான்மை அரசியல் வாதிகளுக்கே வழங்கி எமது உரிமைகளை இழந்து வந்திருக்கின்றோம். அதனால் எமக்கான தேவைகள் அவர்களுக்கு பெரிதாக தென்பட்டதில்லை. அதனால் உட்கட்டமைப்பு வசதிகளில் பின்னடைந்திருக்கின்றோம். அடிமை அரசியலில் இருந்து விடுப்பட்டு இனியாவது அபிவிருத்தியை நோக்கி நகரவேண்டும். அதற்கு நம்மிலிருந்து நமக்காக ஒருவரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யவேண்டும்.”
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எம்.சந்திரகுமார் தெரிவித்தார்.
இரத்தினப்புரியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின்போது கலந்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது,
ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனுக்கே இன்னொரு தோட்டத் தொழிலாளியின் வாழ்கையை பற்றி சரியாக புரிந்துகொள்ள முடியும். எமது தோட்ட மக்கள் சொல்லனா துயரங்களை அனுபவிக்கின்றார்கள். நாம் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து வசதி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளில் பின்னடைந்திருக்கின்றோம்.  அதனால் எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே இன்று நான் அரசியலுக்குள் வந்திருக்கின்றேன்.
நான் ஒரு பட்டதாரி  ஆசிரியர் ஆனாலும் அரசியல் அங்கீகாரம் என்ற ஒன்று அமைந்தால் மாத்திரமே எமது உரிமைகளையும் சலுகைகைளயும் எமது மக்களுக்கான தேவைகளையும்  தன்னால் முறையாக பெற்றுக்கொடுக்க முடியும் என்றார்.
இரத்தினபுரி தமிழ் மக்களின் இன்னல்கள் தொடராமல் முற்று பெற வேண்டுமானால் தன்னை போல் லயத்திலே பிறந்து இறப்பர் தோட்டத்திலே கஷ்டப்பட்டு படித்து பட்டதாரியான தமிழர் ஒருவர் தம் மக்களுக்கு பிரதிநிதியாக அமைய வேண்டும் என்பதை சகலரும் உணரவேண்டும்.
தான் லயத்திலே பிறந்து படித்து ஒரு படி மேலாக பட்டதாரி ஆசிரியர் ஆனாலும் என்னை போன்று பட்டதாரிகள் உருவாகினாலும் நம் சமூகம் மேம்பட அது போதுமானது அல்ல இரத்தினபுரி மாவட்டதிலே தமிழ் பொறியியலாளர்,வைத்தியர்,வழக்கறிஞர், ஏன் ஒரு தமிழ் கிராம உத்தியோகஸ்த்தர்கூட இன்னும் உருவாகவில்லை.
இரத்தினபுரி மாவட்டத்திலே 542 கிராமசேவகர் பிரிவுகள் உள்ளன பொரலுவென்ன  50% தமிழர்கள், ஹபுகஸ்தண்ண 98%, தேணாகந்த 88%, பெட்டிகல 75%, மெதகந்த,மாதம்பை,ஹொரமுல்ல 60% , இறக்குவானை நகரம் 60% ,தமிழ் முஸ்லிம்கள் செறிந்து வாழும் இடங்களிலும் பெரும்பாண்மை இனத்தவரே கிராம சேவகராக கடமையாற்றுகிறார்கள்.
இதற்கான அடிப்படை காரணங்கள் நம்மால் படிக்க முடியாமல் இல்லை வாய்ப்புகள் குறைவாக உள்ளது. எமது மாவட்டத்தில் இன்னும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
கற்றல் உபகரணங்கள் இல்லை, தமிழ் பாடசாலைகளில் பௌதீக குறைபாடு நிறையவே உள்ளது.
மாற்றத்தை முதலில் நாம் பாடசாலையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். எமது பிள்ளைகள் முறையாக படித்து உயர வளங்களை பாடசாலை களுக்கு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.” – என்றார்.

Related Articles

Latest Articles