இரத்தினபுரி, காவத்த பொரனுவ தோட்டத்துக்கு, இ.தொ.காவின் உப தலைவரும், பிரதம அமைச்சரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது தோட்ட நிர்வாகத்தினரை சந்தித்து பேச்சு நடத்தினார். குறிப்பாக பொலிஸார் முன்னிலையிலேயே தோட்ட இளைஞர் ஒருவரை, தோட்ட நிர்வாகத்தினர் தாக்கியதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டதுடன், எச்சரிக்கையும் விடுத்தார்.
நாட்டில் எந்தவொரு பகுதியிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற இ.தொ.கா. ஒருபோதும் அனுமதிக்காது எனவும் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் இ.தொ.கா தொழிற்சங்க அமைப்பாளர் ராஜமணி , இரத்தினபுரி மாவட்டத்தின் இ.தொ.காவின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் ஆகியோரும் செந்தில் தொண்டமானுடன் இருந்தனர்.
செந்தில் தொண்டமானின் ஊடகப்பிரிவு
