மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மாணவர்களின் தன்னம்பிக்கை, கல்வி விழிப்புணர்வு, சமூக அக்கறை மற்றும் எதிர்கால இலக்குகளை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்வு இன்று (21) இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெற்றது.
இந்தியாவின் பிரபல தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வுப் பேச்சாளரான டாக்டர் ஐ. ஜெகன் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.
மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்த்து, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, எதிர்காலத்தில் சவால்களை எதிர்கொண்டு சாதனையாளர்களாக உருவாகுவதற்கான ஊக்கத்தையும் வழிகாட்டலையும் வழங்கும் வகையில் அவரது உரை அமைந்தது.
இதில் பெருந்திரளான மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
மாணவர்களின் ஆளுமை விருத்தி, சிந்தனைத் திறன், சமூகப் பொறுப்பு மற்றும் எதிர்கால இலக்குகளை நோக்கிய பயணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
