இவ்வாண்டின் கடந்த எட்டு மாதங்களில் இரத்தினபுரி மாவட்டப் பொலிஸ் பிரிவுகளிலிருந்து 4447 போதை வஸ்த்துக்கள் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன் இவற்றுடன் சம்பத்தப்பட்ட 1095 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தகவல்களை ஊடகவியலாளர்களுக்கு வழங்கும்போதே அதிகாரிகள் இத்தகவல்களை தெரிவித்தனர்.
கஞ்சா, கஞ்சா செடிகள், ஹெரோயின் , கசிப்பு கோடா ஆகிய போதைப் பொருட்கள் இக்கால பகுதியில் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.