இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்துக்கு மத்தியில் 319 குடும்பங்கள் வசிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்படும் அவதானமான பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அதிகமான மக்கள் வசித்து வருவதாக சப்ரகமுவ மாகாண மேலதிக செயலாளர் ஜீ.டீ. உதய குமாரி தெரிவித்துள்ளார்.

இயற்கை அனர்த்தங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களை அறிவுறுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தகவல் தருகையில், 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண் சரிவு, கடுங்காற்று போன்ற இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உதவிகள் செய்யப்பட்டுள்ளன.இவர்களில் ஆபத்தான பிரதேசங்களில் மேலும் 2557 பேர் வசித்து வந்தனர்.

இவர்களில் 1367 பேருக்கு பாதுகாப்பான வசிப்பிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.எனினும் இப்பகுதிளில் வசிக்கும் மேலும் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1673 பேர் இப்பிரதேசங்களிலிருந்து அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மறுக்கின்றனர். இதனால் இவர்களது உயிர்களுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. அத்துடன் இவர்களது உயிர்களுக்கு அவர்களே பொறுப்பு என உறுதிப்படுத்தி ஒவ்வொருவரும் சத்தியக்கடதாசி சமர்ப்பித்துள்ளனர்.மக்க ளுக்கு பாதுகாப்பு வழங்குவது எமது பொறுப்பாக இருக்கின்ற போதிலும் தனிப்பட்ட இடங்களிலுள்ள மக்களை எம்மால் வெளியேற்ற சட்டம் இடம் கொடுப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles