இரத்தினபுரி மற்றும் மொனறாகலை மாவட்டங்களில் நான்கு கிராம சேவகர் பிரிவுகளில் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொரகல்ல கிராம சேவகர் பிரிவில், நொரகல்ல மேல் பிரிவும், யக்தெஹிவத்த கிராம சேவகர் பிரிவில் பின்கந்த 1 மற்றும் பின்கந்த 2 ஆகிய பகுதிகளும் பாதகட கிராம் சேவகர் பிரிவின் பின்கந்த 3ஆம் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், மொனராகலை மாவட்டத்தில், மொனறாகலை பொலிஸ் பிரிவில் நக்கலவத்த கிராமம், மில்லகெலே வத்த கிராமம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
