இரத்தோட்டை- மெதவத்த தோட்டத்தின் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக, இரத்தோட்டையிலிருந்து ரிவஸ்டன் வரையான வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
ரிவஸ்டன் வீதியின் 23 மற்றும் 24ஆம் மைல் கல்லுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மண்சரிவு ஏற்பட்ட வீதியை சீர்செய்யும் வரை இரத்தோட்டை- ரிவஸ்டன் வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து மாற்று வீதியைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.