தெற்கு ஐரோப்பிய நாடான மெசடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 159 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இரவு விடுதியில் ஏடிஎன் என்ற பிரபல ஹிப் ஹாப் இசைக் குழு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தது. அதில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர் தீயைக் கொண்டு சில சாகசங்கள் நிகழ்த்தியுள்ளனர்.
அதிலிருந்தே நெருப்பு அரங்கின் மேற்கூரையில் பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், விபத்து குறித்த தீவிர விசாரணைக்குப் பின்னரே காரணம் உறுதியாகத் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.