இரவு 10 மணிக்குள் முதலாவது தேர்தல் பெறுபேறு வெளியாகும்!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளன.

தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றாலும் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.

நுவரெலியா மாவட்டத்தில் 80 சதவீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது. நாடு முழுதும் 70 சதவீதத்துக்கு மேல் வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

தபால்மூல வாக்கெண்ணும் பணி மாலை 4.15 மணிக்கு ஆரம்பமானது. இரவு 10 மணிக்குள் முதலாவது தேர்தல் பெறுபேறு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கிலும் மிகவும் அமைதியான முறையில் வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

Related Articles

Latest Articles