அரசாங்கத்தின் புதிய நடைமுறைக்கு அமைய, அமைச்சர்களின் பொதுமக்கள் சந்திப்பு தினம் புதன் கிழமையிலிருந்து திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்திப்பதற்காக அமைச்சின் காரியாலயத்துக்கு வரும் மக்கள் , இனி திங்கள்தோறும் அவரை சந்தித்து கலந்துரையாட முடியும் என அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.