இராணுவ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா – பதுளையில் 116 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தியத்தலாவைக்கு வந்திருந்த இராணுவத்தினர் இருவர், தமக்கான உடைகளை தியத்தலாவை தையல் நிலையமொன்றில்  கடந்த 11 ஆம் திகதி தைத்துச் சென்றிருந்தனர்.  இவ்விருவருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து தியத்தலாவையிலுள்ள குறித்த தையல் நிலையத்தின் உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் ஏழு பேரும் இன்று (15) பிற்பகல் 2.30 மணியளவில் பதுளை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் இன்று மாலை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இப் பரிசீலனை நிறைவுற்றதும்,  அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குற்படுத்துவது அல்லது அங்கொடை கோவிட் 19 தொற்று அரசினர் மருதுவமனைக்கு அனுப்புவது குறித்தும் தீர்மானிக்கப்படும் என்று பதுளை அரசினர் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் இராணுவ அதிகாரிகள் மூவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு அம் மூவருடன் தொடர்புடைய 116 பேர் பதுளை பகுதியில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவிட் 19 தொற்றுக்குள்ளான மூவரும் பசறை, பதுளை, மஹியங்கனை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களாவர். இவர்கள் விடுமுறை பெற்று தமது வீடுகளுக்கு வந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது. பசறை பகுதியை சேர்ந்தவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர்.

எம்.செல்வராஜா பதுளை

Related Articles

Latest Articles