இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் நேற்று மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் பல மணித்தியாலங்கள் நாடு இருளில் மூழ்கியது. போக்குவரத்து உள்ளிட்ட பல அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டன.
மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். நேற்று மாலை 5.10 மணி முதல் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
இதையடுத்து மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் இரண்டு மணித்தியாலங்களில் சீராகும் என்று இலங்கை
மின்சார சபை அறிவித்தது. எனினும், நேற்று இரவு 10.20 மணிக்குப் பின்னர்தான் பல இடங்களில் மின் விநியோகம் வழ
மைக்கு வந்தது.
கொத்மலையில் இருந்து பியகம வரை யிலான மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று நாடளாவிய ரீதியில் மின்சாரம் விநியோகம் தடைப்பட்டது என்று இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நொயல் பிரியந்த தெரிவித்தார்.
இதேவேளை, மின் தடை தொடர் பில் விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில், நாடு முழுவதும் நேற்று மின்சார விநியோகம் தடைப் பட்ட விவகாரம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்
படுகின்றது.
இதற்கிடையில் மின்சக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது.










