இரு இளைஞர்கள் நீரில் மூழ்கிப் பலி! – காலியில் சோகம்



காலி, பெந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பரப்பில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை இந்தச் சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இருவரும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 29 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.

அனர்த்தம் நேரிட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, 25 வயதுடைய இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய இளைஞரான 29 வயதுடையவரின் சடலத்தைத் தேடும் பணிகள் கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles