பிறப்பிலேயே தனது இரு கால்களையும் இழந்த பதுளைப் பகுதி கிராமத்தின் மாணவியொருவர், க.பொ.த. உயர்தரத்தில் அபார சித்தி பெற்று, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி, சாதனை படைத்துள்ளார்.
பதுளைப் பகுதியின் ரில்பொல என்ற கிராமத்தைச் சேர்ந்த மதுசிகா தில்ருக்சி என்ற மாணவியே, கல்வியில் சாதனைப் படைத்தவராவார்.
அதே கிராமத்தின் தர்மராஜ மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய இம் மாணவி, மூன்று பாடங்களிலும் ‘ஏ’ தரங்களில் சித்தி பெற்று, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார். இதனடிப்படையில் பல்கலைக்கழகத்தில் பிரவேசித்து, தான் கற்ற கிராம வித்தியாலயத்திற்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.
தனக்கு இரு கால்களும் இல்லையென்று தாழ்வு மனப்பான்மையைக் கொள்ளவில்லை. அத்துடன் தனது கல்வி மேம்பாடுகளுக்கு தனக்கு கால்கள் இல்லாமை இடையூராக இருக்கவுமில்லை. எனது பல்கலைக்கழக பிரவேசத்திற்கு, எனது பெற்றோரும், ஆசிரியர்களுமே காரணமாகும். நாட்டிற்கு அதி சிறந்த சேவையாற்ற வேண்டுமென்ற இலக்கை நோக்கியே, எனது கல்விப் பயணம் உள்ளது’ என்று பெருமிதத்துடன் மதுசிகா தில்ருக்சி என்ற அம் மாணவி கூறினார்.
எம். செல்வராஜா, பதுளை