இரு தசாப்தங்களுக்கு பிறகு இ/ பெட்டிகலை த.வி. கிடைத்த வெற்றி…!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பலாங்கொடை இ/ பெட்டிகலை தமிழ் வித்தியாலய மாணவியான சுரேஷ் சுதர்சனி 144 புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்துள்ளார்.

சுமார் 25 வருடங்களுக்கு பிறகு இப்பாடசாலையில் இருந்து மாணவியொருவர், வெட்டு புள்ளிக்குமேல் பெற்று, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

இம்மாணவி பலாங்கொடை பெட்டிகலை பிரதேசத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுரேஷ், சுப்பையா செல்வராணி ஆகியோரின் புதல்வியாவார்.

சிறந்த பெறுபேறுமூலம் பாடசாலைக்கும் தமது பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவிக்கு வாழ்த்துகள்.

குறித்த மாணவி உட்பட மாணவர்களை நெறிப்படுத்திய இ/ பெட்டிகலை தமிழ் வித்தியாலய அதிபர் S.M.இல்யாஸ்
, வகுப்பாசிரியர் திருமதி T கலைமதி மற்றும் ஆசிரிய குழாமுக்கும் பெற்றோரும், பழைய மாணவர்களும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles