நாட்டில் கடந்த மே 30ஆம் திகதி முதல் இதுவரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 21 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பாதாள குழுக்களே இச்சம்பவத்தின் பின்னணியில் செயற்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது. வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு உறுப்பினர்களுடன் இதனுடன் தொடர்பு பட்டுள்ளனர்.
போதை பொருள் கடத்தல் , விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு உளவு தகவல் வழங்கும் சிலர் கொல்லப்பட்டுள்ளனர்.
கல்கிஸை நீதிமன்றத்துக்குள்ளும் இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது.
