” இரு விடயங்களுக்காக மட்டுமே ஜனாதிபதிக்கு ஆதரவு” – மொட்டு கட்சி செயலர்

நாட்டை பிளவுபடுத்துவதற்காக அல்ல, ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவே நாட்டு மக்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களித்து, ஆணை வழங்கினர் – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தம்பதெனிய தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினோம். இதற்காக அவர் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

நாட்டை பிரிப்பதற்கு அல்ல, ஒற்றையாட்சியின்கீழ் அதனை பலப்படுத்துவதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே, மக்கள் ஆணைக்கு புறம்பான பயணத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒத்துழைப்பு வழங்காது.” -எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles