தேசிய மக்கள் சக்தியின் தலைவருடனும், அக்கட்சியின் பொருளாதாரக் குழுவுடனும் மே மாதத்துக்குள் விவாதம் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பொருளாதாரக் குழுக்களுக்கிடையிலான விவாதத்தை நடத்த தேசிய மக்கள் சக்தி தயங்குவது போல் தெரிகிறது, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி குழுவாக இரு விவாதங்களுக்கும் தயாராக உள்ளது. இந்த இரண்டு விவாதங்களுக்கும் மே மாதத்திலேயே திகதிகளை ஒதுக்கி கொள்ளுமாறு கூறுகின்றோம். ஒரு விவாதம் குறித்து மட்டும் பேசாது, இரு விவாதங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி தயாராக வேண்டும்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான உண்மையான மற்றும் யதார்த்தமான தரவுகளை மையமாகக் கொண்ட பொருளாதாரப் பார்வை மற்றும் திட்டத்தைக் கொண்ட குழு ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது.
நாட்டுக்காகப் பணியாற்ற முன்வருமாறு தேசிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கின்றோம்.” – எனவும் சஜித் குறிப்பிட்டார்.










