22 ஆவது உலக கிண்ண கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்று நள்ளிரவு 12.30 க்கு இடம்பெற்ற இப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதின.
போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணியினரும் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாகிக்கொண்டனர். போட்டியின் 5 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் முதல் கோல் அடித்தார். இதனால், போட்;டியின் முதல் பாதி முடிவில் 1 – 0 என பிரான்ஸ் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2 ஆவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி சார்பில் போட்டியின் 79 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் கோல் அடித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்க மொரோக்கோ அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், போட்டி முடிவில் 2 – 0 என பிரான்ஸ் அணி வெற்றி பெற்ற இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி ஆர்ஜன்டீனா அணியை எதிர் கொள்ளவுள்ளது.
