இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவுக் குரல் ஓங்கி ஒலிக்கும்!

இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வெளிப்படையாகக் கோரி வருகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் பணியாளர் நிலை உடன்படிக்கையை எட்டியுள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்த அவர், அது எப்படி முன்னேறுகின்றது என்பதை இந்தியா அவதானிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

கடனாளிகளின் சமத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை, பிரச்சினைகளுக்கு உள்ளான இலங்கை தேசத்திற்கு முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியா, இலங்கைக்கு 3.8 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கியுள்ளது. இது பல்வேறு வடிவங்களில் இப்போது 4 பில்லியன்களாகி உள்ளது. தொடர்ந்தும் கடன் பற்றியும் ஏனைய விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்படுகின்றது” என்றும் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.

அண்மையில் பாகிஸ்தான் போர்க்கப்பல் ஒன்று கொழும்புக்கு விஜயம் செய்தமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், “இந்தியாவின் பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் ஏற்பட்டால், அவற்றை இந்தியா உன்னிப்பாக அவதானித்து அதனைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” – என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles