இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன்!

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான ‘ஒமிக்ரோன்’ தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு ஒமிக்ரோன் தொற்றியுள்ளது.

விமான நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது உறுதியாகியுள்ளது.

அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்மூலம் வைரஸ் பரவல் ஏனையோருக்கு பரவுவது தடுக்கப்பட்டுள்ளது என சுகாதார தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Related Articles

Latest Articles