இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்துக்குள் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனக் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
எனினும், இந்தியப் பிரதமரின் வருகைக்கான திகதிகள் இன்னும் இரு தரப்பினராலும் முடிவு செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேலும் கூறுகையில், “இந்தப் பயணத்துக்கான சரியான நேரத்தை நாங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” – என்றார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்பது தெரிந்ததே.
