“மலையகத் தமிழன்” என்பது எனது அடையாளம், ஆனால், நான் ஒரு இலங்கையன். அந்த அடையாளத்தை என்னால் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் முகமாக, “ஒன்றாக வெல்வோம்” என்ற தொனிப் பொருளிலான பொதுக்கூட்டத் தொடரின், இரண்டாவதுப் பேரணி கண்டி பொது வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று (14) இடம்பெற்றிருந்தது.
இக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கெஞ்சி கேட்டால் பிச்சை துணிந்து கேட்டால் உரிமை. நாம் இந்த 1700 ரூபா சம்பளத்தை மட்டும் இறுதிக் கோரிக்கையாக வைக்க கூடாது, ஏனென்றால், நம்மை பொறுத்த வரைக்கும அடையாளப் பிரச்சினை ஒன்று இருக்கின்றது. அந்த அடையாளத்திற்கு கட்டாயம் ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டும். அந்த அடையாளத்திற்கு கட்டாயம் ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டுமென்றால், கட்டாயம் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வந்தாக வேண்டும்.
அப்படி இருக்கும் போது, நான் என்னுடைய மக்களிடம் ஒரே ஒரு விடயத்தை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நான் ஒரு “மலையகத் தமிழன்” என்று எவ்விடத்திலும் சொல்ல போவது கிடையாது.
“மலையகத் தமிழன்” கலாச்சாரமாக என்னுடைய அடையாளம். ஆனால், நான் ஒரு “இலங்கையன்” அதை நான் எந்த ஒரு இடத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது. அப்படி இருக்கும் தருணத்தில் உங்கள் எல்லோரிடமும் நான் ஒரே ஒரு விடயத்தை தான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இன்றைக்கு நிறைய பேர் இந்த பதவியை பார்த்து பயந்து ஓடிப்போய் இறுதியில் ஒன்றுமே செய்ய முடியாமல், நான் தான் நாட்டுக்கு அடுத்த ஜனாதிபதி என்று சொல்ல வருகிறார்கள். ஆனால், மக்கள் எல்லோருக்கும் தெரியும். யார் நின்று வெற்றிப் பெற்றது என்று.
அதே நேரத்தில், இன்றைக்கு கண்டி மாவட்டத்தில், நாவலப்பிட்டி பகுதியில் மஹிந்தானந்த இருக்கின்றார், அவருக்கு நாம் கட்டாயம் ஆதரவு கொடுத்தாக வேண்டும்.
அதே மாதிரி பன்வில பகுதியில் லொஹான் ரத்வத்த இருக்கின்றார், அவருக்கும் நாம் ஆதரவு கொடுப்போம். மேலும் திலும் அமுனுகம இருக்கிறார் அவருக்கும் நாம் ஆதரவு கொடுப்போம்.
கம்பளையில் அனுராத ஜெயரத்தின இருக்கிறார் அவருக்கும் நாம் ஆதரவு கொடுப்போம். ஆனால், அவர்கள் அனைவருக்கும் இன்றைக்கு , ஜீவன் தொண்டமானின் ஆதரவு தேவை! அதை அனைவரும் மனதில் கொண்டாக வேண்டும். கட்டாயம் அப்படி இருக்கும் போது, மலையக மக்கள் பக்கம் நின்றால் நாம் எப்போதும் ஆதரிப்போம் என்று சொல்லி விடைபெறுகின்றேன்.-“ – என்றார்.
